Tuesday, 8 January 2019

நன்றி மறந்த "சிவகார்த்திகேயன்" கதறும் தயாரிப்பாளர்


நடிகர் சிவகார்த்தியேன் தமிழ் சினிமாவில் மின்னல் வேகத்தில் முன்னணி இடத்தை பிடித்த நடிகர்களுள் ஒருவர். அவரது வளர்ச்சியில் தயாரிப்பாளர் RD ராஜா அவர்களின் பெரும் பங்கும் குறிப்பிடத்தக்கது. ஆனால் காலத்தின் கோலம் தற்பொழுது அப்படிப்பட்ட தயாரிப்பாளரையே கலங்கவிட்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.



ரெமோ, வேலைக்காரன், சீமராஜா ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன், RD ராஜா கூட்டணியில் இன்று நேற்று நாளை திரைப்பட புகழ் ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் புனைக்கதை திரைப்படம் உருவாக இருந்தது.


இத்திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி,  தயாரிப்பு பணிகள் துவங்குவதற்கான வேலைகளும் நடைபெற்று வந்தது. இப்படியொரு சூழ்நிலையில், படப்பிடிப்பிற்கு கால்ஷீட் கொடுக்காமல் தட்டிக்கழித்து வருகிறாராம் நடிகர் சிவகார்த்திகேயன்.


இதனால் இயக்குனர் ரவிக்குமார் தரப்பில் மிகுந்த அதிருப்தி தெரிவிக்கப்பட்டு வருகிறது. என்னவென்று விசாரிக்கையில் சீமராஜா பட தோல்வியை அடுத்து தயாரிப்பாளர் RD ராஜா கடன் பிரச்சனையில் சிக்கி தவித்து வருகிறாராம்.


அதனால் எங்கே இந்த படத்தில் நடித்தால், ரிலீஸின் போது தன் தலை உருளுமோ என சிவகார்த்திகேயன் ஜகா வாங்கி நிற்பதும் தெரியவந்துள்ளது.  

இதையும் படிங்க 

ரஜினியை பங்கமாக கலாய்த்த கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்..! வைரலாகும் வீடியோ
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();