Saturday, 19 January 2019

தமிழ் சினிமாவுக்கு குட்பாய்... பாலிவுட் பறந்த நடிகை சிம்ரன்


பேட்ட வெற்றிக்கு பின், வந்த புதிய பட வாய்ப்புகளை மறுத்து, பாலிவுட் பக்கம் சென்று விட்டார் நடிகை சிம்ரன்.

90-களில் தமிழ்நாட்டு இளசுகளின் கனவுக்கன்னியாக வலம்வந்தவர் நடிகை சிம்ரன். தொன்றுதொட்டே கடைபிடிக்கப்பட்டு வந்த தமிழ் சினிமாவின் சம்பிரதாயத்தால், திருமணத்திற்கு பின்பு மார்க்கெட் சரிவை சந்தித்த இவர், தற்பொழுது துண்டு துக்கடா வேடங்களில் நடித்துவருகிறார்.

நாயகியாக நடிக்க முடியாத ஏமாற்றம் இருந்தாலும், குணச்சித்திர வேடங்களிலாவது பெயர் எடுக்க வேண்டும் என்ற ஆசையில் நெகட்டிவ் வேடங்களிலும் தயக்கமின்றி நடித்து வந்தார்.


அப்படி தனக்கு பெயர் வாங்கி கொடுக்கும் என்று நம்பி நடித்த, சீமராஜாவுக்கெதிரான வில்லி வேடமும் படத்தின் ரிசல்ட்டை போல காலைவாரி விடவே, விரக்தியில் இருந்தவருக்கு கொஞ்சம் ஆறுதல் அளித்தது பேட்ட திரைப்படத்தின் வெற்றி.  



இதனால் புதிய பட வாய்ப்புகள் வாசல் கதவை தட்ட, ஒலிப்பதோ 'அம்மணி வீட்டை காலி செய்துவிட்டு, மும்பையிலேயே குடும்பத்துடன் செட்டில் ஆகி விட்டார்' என்ற சத்தம் தானாம்.

மேலும் மாதவனுடன் பாலிவுட்டை மையம் கொண்டு உருவாகும், இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்கை வரலாறு திரைப்படத்திலும் இவர் நடிப்பதால், அந்த படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து பாலிவுட்டிலேயே செட்டில் ஆகிவிடும் முடிவில் சிம்ரன் இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் கிசு கிசுக்கிறது. 
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();