Breaking News

சீமான் சொன்னதை போலவே 'நீதான்பா அடுத்த சூப்பர் ஸ்டார்'..! ஒரே வீடியோவால் நெகிழ வைத்த சிம்பு


தமிழகத்தில் விஜய் அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் என்றால், திரையரங்குகளில் 500, 1000 என மனம் போன போக்கில் டிக்கெட்டுகள் விற்கப்படும் அவலங்கள் நிகழ்ந்தேறிவருகிறது.

அவர்களது தீவிர ரசிகர்களும், எவ்வளவு விலை கொடுத்து வேண்டுமானாலும், தங்களது ஹீரோக்களின் படங்களை பார்க்க தயாராக உள்ளனர்.

இப்படி மாபெரும் டிக்கெட் கொள்ளை நடக்கிறது என அறிந்தும், இப்படி பட்ட பெரிய நட்சத்திரங்கள் கண்டுகொள்வதில்லை. இப்படி நிர்ணயிக்கப்பட்ட தொகையினை மட்டும் ரசிகர்கள் செலுத்தினால் முதலுக்கே மோசமாகி விடும் என்பதனாலேயே விஜய், அஜித் போன்ற நடிகர்கள் இது குறித்து வாய் திறந்ததில்லை.


இவர்கள் ஒருபுறம் இருக்க, சீமானால் அடுத்த சூப்பர் ஸ்டார் என புகழப்பட்ட நடிகர் சிம்பு, அந்த கருத்துக்கு ஏற்றாற்போலவே, தைரியமாக தன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்திருக்கிறார்.

இது சம்பந்தமாக அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில், 'நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலை கொடுத்து ரசிகர்கள் என் படத்தினை பார்க்க வேண்டாம். கட் அவுட் பாலாபிஷேகம் என வீண் செலவு செய்யவேண்டாம்.

அதற்கு பதிலாக உங்கள் தாய், தந்தைக்கு உடை எடுத்து கொடுத்து அதனை பதிவிடுங்கள். அதுவே எனக்கு போதும்' எனக்கூறி ரசிகர்கள் மனதில் பாலை வார்த்திருக்கும் சிம்பு, தயாரிப்பாளருக்கோ வலுக்கட்டாயமாக கள்ளிப்பாலை ஊற்றியதை போல அதிர்ச்சியை அளித்து இருக்கிறார்.