Breaking News

சிம்புவுக்கு பாட்டியான 'காஜல் அகர்வால்'..! இது என்னய்யா கொடுமை..?


சங்கர் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்தியன்-2 திரைப்படத்தில் சிம்புவுக்கு பாட்டியாக காஜல் அகர்வால் நடிக்க இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறது.

1996-ம் ஆண்டு வெளியாகி வெறித்தனமான வெற்றியை பெற்ற திரைப்படம் இந்தியன். இதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்புகள் விரைவில் துவங்க உள்ள நிலையில், கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க இருப்பதாக செய்திகள் வலம் வருகிறது.

மேலும் கமலின் பேரனாக, சிம்பு நடிக்க இருக்கும் தகவல்களும் அதிகாரப்பூர்வமாகி இருக்கிறது. அதன் படி இந்தியன்-2 திரைப்படத்தில் காஜல் அகர்வால் நடித்ததால், கதைப்படி சிம்புவுக்கு அவர் பாட்டி ஆவார்.


இதனை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கேலி செய்து வரும் நிலையில், 'இதென்னாடா வம்பு' என ஏற்கனவே மார்க்கெட் டல்லடித்துப் போய் இருக்கும் காஜல் அகர்வால் தரப்பு மிரண்டு நிற்பதாக பேசப்பட்டு வருகிறது.

முன்னதாக கமலுக்கு ஜோடியாக இப்படத்தில் நயன்தாரா நடிக்க இருந்ததும், பின்னர் ஒரு சில காரணங்களிலால் அப்படத்தில் இருந்து விலகிவிட்டதும் குறிப்பிடத்தக்கது.