Breaking News

விஸ்வாசம் பார்த்து மெர்சலான ஷாலினி...!


நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி அண்மையில் விஸ்வாசம் திரைப்படத்தின் பிரிவியூ காட்சியினை கண்டுகளித்துள்ளார்.

சிவாவின் இயக்கத்தில் நடிகர் அஜித்தின் 58வது படமாக விஸ்வாசம் உருவாகியுள்ளது. வருகிற ஜனவரி 10ம் தேதி, பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக திரைக்கு வர இருக்கும் இத்திரைப்படத்தின் முன்னோட்ட காட்சிகள் திரையுலகத்தினருக்கு திரையிடப்பட்டு வருகிறது.

அப்படி, நேற்று நுங்கம்பாக்கத்திலுள்ள, பிரிவியூ தியேட்டரில் விஸ்வாசம்  திரைப்படத்தினை பார்த்த பிரபலங்களில் அஜித் அவர்களின் மனைவி ஷாலினியும் அடக்கம்.

படம் பார்த்து முடித்துவிட்டு ஷாலினி, 'மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், கண்டிப்பாக இத்திரைப்படம் அனைவருக்கும் பிடிக்கும் என்றும் கருத்து தெரிவித்து இருக்கிறார்.