Tuesday, 29 January 2019

முதல் படமே இவ்வளவு பிரமாண்டமா..? தளபதியின் மகனுக்கு அடித்த அதிர்ஷ்டம்


சினிமா பிரபலங்களின் வாரிசுகளும், திரைத்துறையில் நுழைவது வழக்கம் ஆகி வரும் நிலையில், நடிகர் விஜயின் மகன் சஞ்ஜையும் நடிக்க இருப்பது குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத நட்சத்திரமாக வலம்வரும், நடிகர் விஜய். இவரது மகன் சஞ்சய், தற்பொழுது திரைப்படம் குறித்த மேற்படிப்பை கனடாவில் மேற்கொண்டு வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக, அவர் இயக்கி நடித்த இரண்டு குறும்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி டிரெண்ட் ஆனது. இந்நிலையில், அவரை தமிழ் சினிமாவில் பார்க்க வேண்டும் என்ற தங்களது ஆசையை நடிகர் விஜயின் ரசிகர்கள், தொடர்ந்து தெரிவித்து வந்தனர்.


ரசிகர்களின் இந்த ஆசை விரைவில் நிறைவேற இருக்கிறது. அதுவும்  சங்கர் எனும் தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் மூலம். சஞ்சய் நடிகராக அறிமுகமாகும் இந்த திரைப்படம் குறித்த பேச்சுவார்த்தை சமீபத்தில் நடைபெற்றுள்ளது.

என்னதான் தான் ஒரு மாபெரும் அந்தஸ்தில் இருக்கும் நடிகர் என்றாலும், 'தந்தையின் தயவால் வந்தவன்' என்ற பெயரை தனது மகன் பெற்றுவிடக்கூடாது என்ற நிலைப்பாட்டினால், தனது மகன் அடிமட்டத்தில் இருந்து ஒவ்வொன்றாக கற்று ஒரு பெரிய நடிகனாக வரவேண்டும் என நினைக்கிறாராம் விஜய்.

இதனால், பிற நடிகர்கள் போல, தனது மகனின் பிரமாண்ட திரையுலக என்ட்ரிக்கு எந்த வித உதவியும் செய்யாமல் அவர் இருந்தநிலையிலும், தானாக தேடி வந்திருக்கிறதாம் சங்கர் எனும் பிரமாண்ட இயக்குனரின் திரைப்பட வாய்ப்பு. 



குறிப்பிட்ட திரைப்படத்தில் நடிகர் விக்ரமின் மகன் 'துருவ்'வும் நடிக்க இருப்பதாக தகவல்கள்  கோலிவுட்டை ரவுண்டு வருகிறது.    
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();