Breaking News

நிகழ்ச்சி தொகுப்பாளரான நடிகர் விஜயின் மகன் - வைரலாகும் வீடியோ


நடிகர் விஜயை தொடர்ந்து அவரது மகன் சஞ்சயும் சினிமாவுக்கு வர இருப்பது குறித்த பேச்சுதான் திரையுலகில் இப்பொழுது ஹாட் டால்க்.

சில நாட்களுக்கு முன்பு சஞ்சய் நடித்து இயக்கி இருந்த குறும்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.  இதனை தொடர்ந்து நடிப்பின் மீது இருக்கும் அவரது ஆர்வம் குறித்தும் திரைத்துறையில் அவரது  என்ட்ரி குறித்தும் விஜயின் ரசிகர்கள் பேச துவங்கினர்.

மேலும் தன் தந்தை பாணியிலேயே எந்த வித அலட்டலும் இல்லாமல், அந்த குறும்படத்தில் சஞ்சய் நடித்திருந்தது பலரின் பாராட்டுகளையும் பெற்று இருந்தது.

இப்படி இருக்க நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் தோன்றி ரசிகர்களையும், திரையுலகினரையும் வியக்க வைத்து இருக்கிறார் சஞ்சய். அதாவது இன்று சமூக வலைத்தளங்களில் சுற்றி திரியும் வீடியோ ஒன்றில் சஞ்சயின், இயக்குனர் ஆனந்த் சங்கர் உடனான நேர்காணல் இடம் பெற்று உள்ளது.

அதில், ஒரு பிரபலத்தின் மகன் என்ற எந்தவித தோரணையும் இன்றி நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது கேள்விகளை சிறப்பு விருந்தினரிடம் மிகப்பணிவாக வினவி இருந்தார்.

குறிப்பிட்ட வீடியோ நடிகர் விஜயின் ரசிகர்களால் அதிக அளவில் பகிரப்பட்டு வரும் நிலையில், அடிமட்டத்தில் இருந்து கற்றுக் கொண்டு ஒரு நடிகனாக வர வேண்டும் என்பதற்காக சஞ்சய் எடுக்கும் முயற்சிகள் பெரும் அளவில் பாராட்டுக்களை பெற்று வருகிறது.