Breaking News

இவருக்கு இம்புட்டு மவுசா..? யூட்யூபை அலறவிடும் சாய்ப்பல்லவி


நடிகை சாய்ப்பல்லவியின் ஃபிடா திரைப்பட 'வச்சிந்தே' பாடல் யூட்யூபில் பட்டையை கிளப்பி வருகிறது. 

உங்களில் யார் அடுத்த பிரபுதேவா எனும் நடன நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி, ப்ரேமம் திரைப்படத்தின் மூலம் மலர் டீச்சராக ரசிகர்களை கவர்ந்தவர் சாய்ப்பல்லவி.

இப்படி நடனத்தை மூலதனமாக கொண்டு பிரபலத்தை எட்டியவரான இவர் தனது நடனத்தால்,  யூட்யூபில் ஹிட் அடித்து வருகிறார். சென்ற மாதம் ரிலீஸ் ஆன மாரி 2 திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த, 'ரௌடி பேபி' எனும் பாடல், சமீபத்தில் யூட்யூப் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.


அந்த பாடலில் நடிகர் தனுஷை தனது நடனத்தால் தூக்கி சாப்பிட்டு இருந்தார் சாய்ப்பல்லவி. ரசிகர்களும் அவரது நடனத்தை புகழ்ந்து தள்ள கோடிகளை தொட்டது அப்பாடலை பார்த்தவர்களின் எண்ணிக்கை.



இப்படி ரௌடி பேபி பாடல் ஒருபுறம் ஹிட் அடிக்க, சென்ற வருடம் வெளியிடப்பட்ட சாய்ப்பல்லவியின் 'வச்சிந்தே' பாடல் சுமார் 17 கோடியே 36 லட்சம் பார்வையாளர்களை கடந்து தென்னிந்தியாவிலேயே அதிக பார்வையாளர்களை பெற்ற பாடலாக சாதனை படைத்துள்ளது.


முன்னதாக அனிருத் இசையில் நடிகர் தனுஷ் பாடிய "வொய் திஸ் கொலவெறி" பாடல் 17 கோடியே 26 லட்சம் பார்வையாளர்களை கொண்டிருந்ததே சாதனையாக இருந்து வந்தது.

இப்படி சாய்ப்பல்லவி குத்தாட்டம் போடும் பாடல்கள் எல்லாம் ஹிட் அடிப்பதால், தற்பொழுது அவர் நடிக்கும் படங்களிலும் நடனத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.