Saturday, 12 January 2019

"நயன் இல்ல, நீ தான்மா ரியல் லேடி சூப்பர் ஸ்டார்..!" நடிகையை கொண்டாடும் திரையுலகம்


தமிழ் சினிமாவில் பெரும்பாலான நாயகிகள், நடிப்பதை தவிர பிற பிரச்சனைகளில் பங்கு பெறுவதில்லை. அவர்களுக்கு நாயகர்களை போல படம் ஓடவில்லை என்றால், விநியோகஸ்தர்களின் நஷ்ட ஈடு பிரச்சனையும் கிடையாது, தயாரிப்பாளர்களின் நஷ்டம் குறித்து வருந்தவும் தேவை இருக்காது. 

என்றாலும் தாமாக முன்வந்து, படக்குழுவின் பிரச்சனைகளில் பங்கு பெரும் தங்கமான நடிகைகள் ஒரு சிலரே. அப்படியொரு புகழை நடிகை சாய்ப்பல்லவி தற்பொழுது அடைந்திருக்கிறார்.

அண்மையில் சாய்ப்பல்லவி நடிப்பில் "படி படி லெச்சே மனசு" எனும் தெலுங்கு திரைப்படம் வெளியாகி இருந்தது. துரதிஷ்டவசமாக இத்திரைப்படம் படு தோல்வியும் அடைந்தது.


என்றாலும், நடிகை சாய்பல்லவிக்கு இருந்த சம்பளபாக்கியான ரூபாய் 40 லட்சத்தை, வாக்கு கொடுத்தபடியே ரிலீசுக்கு பின்னர் கொடுக்க முயன்றுள்ளது ஸ்ரீலக்ஸ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம்.

ஆனால் சாய்ப்பல்லவியோ, 'பெருந்தன்மையுடன் இப்படத்தின் தோல்வியில் எனக்கும் பங்கு உண்டு' எனக்கூறி வாங்க மறுத்து, தயாரிப்பாளரை நெகிழ வைத்து இருக்கிறார்.


இதனை கேள்விப்பட்டு வியந்து நிற்கும் தமிழ் திரையுலகம், இவர்தான் ரியல் லேடி சூப்பர் ஸ்டார்  என புகழ்ந்து தள்ளிவருகிறது.

பின்குறிப்பு : நடிப்பில் நயனை அடிச்சிக்க ஆள் இல்ல என்பது மறுக்க முடியாத உண்மை.    
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();