Breaking News

ஹாலிவுட் லெவலில் சாதனை படைத்த சாய்ப்பல்லவி...! எகிறும் மார்க்கெட்


தனுஷ், சாய்பல்லவி நடிப்பில் வெளிவந்த 'மாரி-2' திரைப்படத்தின் 'ரௌடி பேபி' பாடல் ஹாலிவுட் லெவலில் சாதனை படைத்துள்ளது.

உலக அளவில் தமிழ் சினிமா பாடல்கள் ட்ரெண்ட் ஆவது, மிகவும் அரிதான ஒன்று. அதன்படி தனுஷின் கொலவெறி பாடலுக்கு பின்பு அந்த சாதனையை படைத்திருக்கிறது 'ரௌடி பேபி' பாடல்.


'பாலாஜி மோகன்' இயக்கத்தில் மாரி திரைப்படத்தின் இரண்டாம்பாகம் சென்ற மாதம் வெளியானது. வசூல் மற்றும் விமர்சன ரீதியாக தோல்விப்படமாக மாரி-2 அமைந்து விட, ஆறுதல் பரிசு கிடைத்ததை போல மாபெரும் சாதனைகளை படைத்தது வருகிறது 'ரௌடி பேபி' பாடல்.  


யுவனின் இசையில், தனுஷ் மற்றும் பாடகி தீ இணைந்து பாடியிருந்த இப்பாடல், வெளியான முதல் நாளே '70 லட்சம்' பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது.

இந்நிலையில் பிரபல ஹாலிவுட் பத்திரிக்கையான, ஹாலிவுட் ரிப்போர்ட்டரின் சென்ற வாரத்திற்கான சிறந்த பாடல்கள் பட்டியலில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது அப்பாடல்.


என்னதான் முன்னணி நடிகர் தனுசின் பாடலாக அமைந்திருந்தாலும், உலக அளவில் பேசப்பட்டதற்கு சாய்பல்லவியின் நடனமும் ஒரு முக்கிய காரணம். இது மட்டுமல்லாது, இவரது 'வச்சிந்தே' எனும் தெலுங்கு பாடலும், இந்திய அளவில் அதிக பார்வையாளர்களை பெற்ற பாடலாக அண்மையில் சாதனை படைத்தது இருந்தது .  

இந்த தொடர் சாதனைகளால், சாய்ப்பல்லவியை தங்கள் படங்களில் வெயிட்டாக நடனம் ஒன்றை போட வைக்க தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருகின்றனர்.