Breaking News

ரோபோ சங்கரின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய செல்ல மகள்


சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமடைந்து, தற்பொழுது தமிழ் சினிமாவில் மின்னல் வேகத்தில் வளர்ந்து வருபவர் ரோபோ சங்கர்.

அஜித், தனுஷ் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் அளவிற்கு குறுகிய காலத்தில் வளர்ந்திருக்கும் இவருக்கு தளபதி விஜயுடன் நடிப்பது எட்டாக்கனியாகவே இருந்து வந்துள்ளது.

 
இந்நிலையில் தந்தைக்கு எட்டாத கனியை எட்டிப் பறித்து இருக்கிறார் அவரது மகள். ஆம், அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தளபதி 63' படத்தில் நடிக்க தேர்வாகி இருக்கிறார்.

நாயகனாகும் சூர்யாவின் மகன் 'தேவ்'... அதுவும் இந்த சூப்பர் கதையில்  

டிக்டாக் எனும் சமூக வலைதள செயலி ஒன்றில் தொடர்ந்து நடிப்பு வீடியோக்களை மகள் வெளியிட்டு வர, அந்த வீடியோக்கள் இயக்குனர் அட்லீயின் பார்வைக்கு செல்ல, கிடைத்திருக்கிறது தளபதி 63 எனும் பிரமாண்ட திரைப்பட வாய்ப்பு.


இதனை திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்த ரோபோ சங்கர், படிப்பு காரணாமாக அவருக்கு வந்த பல திரைப்பட வாய்ப்புகளை தவிர்த்ததாகவும், விஜய்- அட்லீ எனும் பிரமாண்ட கூட்டணி என்பதால் சிறிதும் யோசிக்காது ஓகே சொல்லி இருந்ததாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருந்தார்.