Friday, 4 January 2019

"மீண்டும் இணையலாம் ஆனால்".... வடிவேலுவுக்கு ரஜினி போட்ட கண்டிஷன்


தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் உச்சம் என்றால் இந்த தலைமுறையினரும் நடிகர் வடிவேலுவைதான் கை காட்டுவர். அந்த அளவிற்கு மக்கள் ரசிக்கும் படி இருந்த அவரது நகைச்சுவை காட்சிகளை, மீண்டும் காண முடியாமல் செய்தது அவருடைய வீண் பிடிவாதம்.

தேர்தல் பிரச்சாரத்தில் 'அதிமுக'வை எதிர்த்து பேசி பட வாய்ப்புகளை இழந்த வடிவேலு, அதில் இருந்து  சமீபத்தில் மீண்டு வந்தாலும், "இம்சை அரசன் -2" பட பிரச்சனையில் ரெட் கார்ட் வாங்கி நடிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.

இப்படியொரு சூழ்நிலையில் கலைஞர் கருணாநிதி அவர்களின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட வடிவேலு மற்றும் ரஜினிகாந்த் மனம் விட்டுப் பேச, 'விரைவில் நாம் மீண்டும் இணைந்து நடிக்கலாம்'எனக்கூறி இன்ப அதிர்ச்சி அளித்திருக்கிறார் ரஜினிகாந்த்.

என்றாலும் அதற்கு முன்னதாக, நிலுவையில் இருக்கும் புலிகேசி பட பிரச்சனைகளை முடித்து விட்டு வாருங்கள் என்ற நிபந்தனையையும் அவர் விதிக்க, தற்பொழுது அதற்கான வேலைகளில் மும்முரமாக செயல்பட்டு வருகிறாராம் வைகைப்புயல்.  
Disqus Comments
'