Breaking News

ரஜினியின் கடைசி படம் இதுதான்..! ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய தகவல்


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலில் இறங்குவது குறித்து முடிவு செய்து விட்ட நிலையில்,  திரையுலகில் இருந்து எப்பொழுது வெளியேறுவார் என்ற கேள்வியும் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் ஆட்டிப்படைத்து வருகிறது.

ஏற்கனவே உலக நாயகன் கமல்ஹாசன், தனது இறுதி படம் என "இந்தியன்-2" வை அறிவித்துவிட்ட நிலையில், ரஜினியின் கடைசி திரைப்படம் குறித்த தகவல் தற்பொழுது வெளிவந்துள்ளது.


கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் பேட்ட பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. அதனை தொடர்ந்து A.R.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் சூப்பர் ஸ்டார்.

பின்னர் K.S. ரவிக்குமார், பாட்சா இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, கார்த்திக் சுப்பாராஜ் ஆகியோருடன் என படங்கள் வரிசை கட்டி நிற்கும் நிலையில்,  இறுதியாக பாகுபலி புகழ் S.S. ராஜமௌலி அவர்களின் படத்தோடு, தனது திரையுலக வாழ்விற்கு ரஜினி குட் பாய் கூற இருக்கிறார் என்பதே அந்த தகவல்.


இது ரஜினியை ஒரு அரசியல் தலைவனாக பார்க்கவேண்டும் என்று காத்திருக்கும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்திருந்தாலும், அவரை சூப்பர் ஸ்டாராக திரையில் பார்த்து ரசித்த சினிமா வெறியர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.