Breaking News

ரசிகரின் அம்மாவை ஆபாசமாக வர்ணித்த நடிகை...! திட்டி தீர்க்கும் ரசிகர்கள்


சமூக வலைத்தளங்கள் சினிமா பிரபலங்களுக்கு எந்த அளவிற்கு விளம்பரங்களுக்கு உதவியாக உள்ளதோ, அதே அளவு விமர்சனங்களுக்கும் வழிவகுத்து விடுகிறது. இப்படியொரு சூழ்நிலையில், ரசிகரின் தாயாரை படு கேவலமாக பேசி நடிகை ராகுல் ப்ரீத் சிங் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

தீரன் அதிகாரம் ஒன்று, திரைப்படத்தில் நடித்து தமிழில் பிரபலமானவர் ராகுல் ப்ரீத் சிங். இவர் சூர்யாவுடன் 'NGK', சிவகார்த்திகேயன் திரைப்படம் என அடுத்தடுத்து பெரிய படங்களில் நடித்து வருகிறார்.


ஃபேஷன் பிரியையான இவர், பெரும்பாலும் தனது சமூக வலைதள பக்கத்தில் விதவிதமாக உடையணிந்து புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கம். அப்படி சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்றில், அவரை ஆபாசமாக வர்ணித்து கமெண்ட் செய்திருந்தார் ரசிகர் ஒருவர்.

இதனால் கடுப்பான நடிகை, தன்னிலை மறந்து அந்த ரசிகரின் தாயாரை மிகவும் ஆபாசமாக ஒப்பிட்டு பதிலடி கொடுத்திருந்தார். இவரது இந்த கருத்தை கண்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், 'என்னதான் அந்த ரசிகர் செய்தது தவறாக இருந்தாலும், அவரது தாயாரை இவ்வளவு கீழ்த்தரமாக விமர்சித்து, நீங்களும் அவரை போல் தான் என்று நிரூபித்து விட்டீர்கள்' என விமர்சித்து வருகின்றனர்.