Breaking News

"விஜய் காலில் விழுந்தது இதனால்தான்" சர்ச்சை காட்சி குறித்து பேசிய பிரபலம்


தமிழ் சினிமாவில் செல்வாக்கு மிக்க நடிகர்களில் ஒருவர் விஜய். இன்று வசூல் வேட்டை புரிவதில் தமிழ் சினிமாவிலேயே நம்பர் 1 ஆக இருக்கும் இவர், புலி திரைப்படத்தில் சிறிய கதாப்பாத்திர நடிகர் ஒருவரின் காலில் விழுவது போன்ற ஒரு காட்சி மிகுந்த விமர்சனங்களுக்கு ஆளானது.

என்றாலும் அந்த காட்சி குறித்து எந்த வித விளக்கமும் வெளிவராத நிலையில் முதன் முறையாக, அதுபற்றி பேசி இருக்கிறார் சண்டை இயக்குனரான திலீப் சுப்புராயன்.


சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், "'புலி  திரைப்படம்' முழுக்க முழுக்க குழந்தைகளை கவரும்ஒன்றாக எடுக்கப்பட்டது.

அந்த சமயத்தில் ஒரு குழந்தை பெற்றோரின் காலில் அமர்ந்தவாறு செல்லும் விளம்பரம் பிரபலமாக இருந்தது. அதன் காரணமாகவே அதே போன்ற காட்சி புலி திரைப்படத்தில் இடம் பெற்றது" என்றிருந்தார்.