Breaking News

அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட கணவர்..! 'வெயில்' நாயகிக்கு நிகழ்ந்த கொடுமை


'வெயில்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த, 'பிரியங்கா நாயர்' கணவரால் தான் பட்ட கஷ்டங்கள் குறித்து அதிர்ச்சியளிக்கும் தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்.

'உருகுதே மருகுதே' எனும் ஒரே பாடலில் தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தவர் பிரியங்கா நாயர். அதன் பிறகு ஓரிரு படங்களில் நடித்தாலும், தமிழில் பெரிய அளவில் ஜொலிக்க வில்லை.


இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு இயக்குனர் லாரன்ஸ்ராம் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு முகுந்த் ராம் என்ற குழந்தையும் பிறந்தது.

இவர்களது திருமண வாழ்க்கை, சுமூகமாக சென்று கொண்டிருந்த வேளையில் கடந்த 2015ம் ஆண்டு விவாகரத்துகோரி மனுதாக்கல் செய்தார். தற்பொழுது இந்த ஜோடி பிரிந்து வாழ்ந்து வருகிறது.

திருமணத்திற்கு பிறகான இடைவெளியை அடுத்து, தற்பொழுது மீண்டும் நடிக்க துவங்கி இருக்கும் பிரியங்கா நாயர். தனது காதல் கணவரை பிரிந்ததற்கான காரணத்தை முதன் முறையாக வெளியிட்டு இருக்கிறார்.


அதன்படி, இருவருக்கிடையேயான சிறிய மனோஸ்தாபத்துக்கு பின் தனது தாயார் வீட்டில் வசித்து வந்த பிரியங்காவை பழிவாங்கும் நோக்கில், அவரது அந்தரங்க புகைப்படங்களை கணவர் லாரன்ஸ் இணையத்தில் பரப்பியதாக தெரிகிறது.

கணவரது இந்த நடவடிக்கையாலும், சினிமாவில் நடிக்க கூடாது என்ற அவரது கட்டுப்பாடு பிடிக்காததாலும்தான் விவாகரத்து கோரியதாக பிரியங்கா வருத்தத்துடன் தெரிவித்து இருந்தார்.