Thursday, 17 January 2019

போலீசாரையும் புகழ வைத்த 'விஸ்வாசம்' திரைப்பட காட்சி..!


அஜித்தின் விஸ்வாசம் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி ஒன்றினை சென்னை காவல்துறை துணை ஆணையர் புகழ்ந்து பேசி இருக்கிறார்.

சிவா இயக்கத்தில், நான்காவது முறையாக அஜித் நடித்து வெளிவந்த விஸ்வாசம், ஒரு மெகா ஹிட் வெற்றியை படக்குழுவினருக்கு அளித்தது. இத்திரைப்படத்திற்கு குடும்ப ரசிகர்களிடம் இருந்து ஏகோபோக வரவேற்பு கிடைத்துள்ளது.



இந்நிலையில், இப்படத்தில் குடும்ப அக்கறை மட்டும் அல்லாது சமூக அக்கறை நிறைந்த காட்சிகளும் இடம்பெற்றுள்ள நிலையில், சென்னை காவல்துறை துணை ஆணையரான அர்ஜுன் சரவணன், நடிகர் அஜித்தை பாராட்டி இருக்கிறார்.


சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், 'அஜித்தின் விஸ்வாசம் திரைப்படத்தினை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அத்திரைப்படத்தின் பாடல், சண்டை காட்சிகள், திரைக்கதை என அனைத்தும் பிடித்திருந்தாலும் ஒரு சில காட்சிகள் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.



அவற்றுள், நாயகன், நாயகி இருவரும் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து செல்வது, கார் ஓட்டும் காட்சிகள் அனைத்திலும் சீட்பெல்ட் அணிந்தது, பெற்றோர்கள் குழந்தைகளின் மீது தங்கள் கனவுகளை திணிக்க கூடாது என்ற கருத்து ஆகியவை அடக்கம்.


இந்த காட்சிகளை, ரசிகர்களும்  பின்பற்றி நடந்தால் சாலை விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கலாம். இப்படியொரு சமூக அக்கறை கொண்ட திரைப்படத்தினை இயக்கிய சிவாவிற்கும், நடிகர் அஜித்திற்கும் எனது பாராட்டுக்கள்' என புகழ்ந்து பேசி இருந்தார்.
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();