Breaking News

"நானும் அஜித் ரசிகர் தான்" இணையத்தை கலக்கிய தமிழக போலீஸ்


சாதாரண மக்கள் மட்டுமல்லாது, சினிமா பிரபலங்கள் பலரும் தல, தளபதி, சூப்பர் ஸ்டார், உலக நாயகன் என தமிழ் சினிமாவின் மாபெரும் நடிகர்களுக்கு ரசிகர்கள் எனக்கூறி பார்த்திருப்போம். ஆனால், அசிஸ்டன்ட் கமிஷனர் ஒருவர், 'நான் தல அஜித்தின் ரசிகர்' எனக்கூறி இணையதளங்களில் வைரலாகி வருகிறார்.

சமீபத்தில் ரசிகரோடு, ரசிகராய் 'விஸ்வாசம்' திரைப்படத்தை பார்த்த அவர், அந்த திரைப்படம் குறித்து தனியார் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அதில் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்கும், பிங்க் திரைப்பட ரீமேக்கில் தான் நடிக்க இருக்கும் தகவலையும் பகிர்ந்து கொண்டார்.

எல்லை மீறும் ரசிகர்கள்...! அஜித் எடுத்த அதிரடி முடிவு...!

மேலும் திரைப்பட இயக்குனராகும் தனது எதிர்கால திட்டம் குறித்தும் பேசிய அவர், 'தான் நடிகர் அஜித்தின் ரசிகன்' என்றும் முதன் முதலில் அவர் படத்தையே இயக்க ஆசைப்படுவதாகவும் தெரிவித்தார்.

இப்படி போலீஸ் உடையில் ஒருவர் நடிப்பு குறித்தும், இயக்கம் குறித்தும் பேசி இருக்கும் நிலையில், 'இவர் கண்டிப்பாக  நிஜ போலீஸ் இல்லை, ஜுனியர் ஆர்ட்டிஸ்ட் ஆக இருக்கலாம்' என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



ஆனால் ஒரு சில ரசிகர்களோ, இவர் உண்மையான போலீஸ் அதிகாரிதான் என்றும், சென்னை 'கேகே நகர்' காவல் நிலையத்தில் அவர்  இன்ஸ்பெக்டராக பணி புரிந்தது குறித்தும் அடித்து கூறி வருகின்றனர்.