Wednesday, 16 January 2019

நயன்தாராவுக்கே முக்கியத்துவம் கொடுக்காத அஜித்...! புலம்பும் லேடி சூப்பர்ஸ்டார்


திரைத்துறையில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாராவை அதிருப்தியில் புலம்ப வைத்துத்துவிட்டாராம் தல அஜித்.

தமிழ் சினிமாவில் நாயகர்களுக்கு இணையான மவுஸோடு வலம்வருபவர் நயன்தாரா. இவர் நடிக்கும் படங்களில் நாயகர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படாமல் நயன்தாராவின் படங்களை போட்டு விளம்பரங்கள் தேடிக்கொள்ளும் சம்பவங்கள் நிகழ்ந்தேறிவருகின்றனர்.


இதனால் நாயகர்கள் நயன்தாராவின் மீது அதிருப்திகொள்வதும் வாடிக்கையான ஒன்றாகி வருகிறது. இப்படிப்பட்ட லேடி சூப்பர்ஸ்டாரை அதே பாணியில் அதிருப்திகொள்ள வைத்திருக்கிறார் நடிகர் அஜித்.

விஷயம் என்னவென்றால், சமீபத்தில் வெளியான 'விஸ்வாசம்' திரைப் பட போஸ்டர் விளம்பரங்கள் எதிலுமே நயன்தாராவின் படங்கள் இடம் பெறவே இல்லையாம். நயன்தாராவும் தானாக முன்வந்து தனது போட்டோவை இடக்கூற, இறுதிக்கட்ட ஒப்புதலரான அஜித், நயன்தாரா எதற்கு என அவரது படத்தை நீக்க கூறி விட்டாராம்.


விஷயம் அறிந்து மனவேதனை அடைந்த நயன்தாரா நட்புவட்டாரங்களிடம் புலம்ப, அதனை கேள்விப்பட்ட அஜித், மீண்டும் நயன்தாராவின் படங்களையும் சேர்த்துகொள்ள கட்டளை பிறப்பித்திருக்கிறாராம்.

'லேடி சூப்பர் ஸ்டாராவே' இருந்தாலும் 'தல'க்கு அடுத்துதான்!!! 


Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();