Breaking News

சிம்பு ஒரு மடங்குன்னா, மகத் 10 மடங்கு..! ஆரம்பமே கிளம்பிய சர்ச்சை..!


நடிகர் சிம்புவின் படங்களும் அது வெளியாவதற்குள் சந்திக்கும் பிரச்சனைகளும் திரையுலகம் அறிந்த ஒன்று. அந்த அளவிற்கு, வந்தால் பிரச்னையோடுதான் வருவேன் என சிம்பு சிக்கும் விவகாரங்கள் ஏராளம்.

தற்பொழுது அவரைப் போலவே, அவரது சிஷ்யரும், தீவிர ரசிகருமான மகத்தின் திரைப்படமும் போட்ட பிள்ளையார் சுழியிலேயே சர்ச்சைக்கு ஆளாகி இருக்கிறது.


பிரபு ராம் இயக்கத்தில், பிக்பாஸ் பிரபலங்கள் மகத், ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா'. சிம்புவின் ரசிகராக, மகத் நடித்திருக்கும் (திரைப்படத்திலுமா..?) இப்படத்தின் முதற்பார்வை போஸ்டர் நேற்று வெளியானது.

அதனை பார்த்த சினிமா ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சி, ஏனென்றால் 'முதல் கோணல் முற்றிலும் கோணல்' என்பது போல, பர்ஸ்ட் லுக் போஸ்டர் எடிட்டிங்கிலேயே தெரிந்துவிட்டது படக்குழுவினரின் ஆர்வம்.

அதாவது, கதக்களி திரைப்படத்தில் விஷால் நடித்திருந்த பாடல்காட்சியை பின்னணியில் வைத்து, அந்த முதற்பார்வை போஸ்டரை ரெடி செய்திருக்கிறார்கள். அதிலும் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால், நடிகர் விஷாலை கூட அந்த போஸ்டரில் இருந்து எடிட்டர் நீக்கவில்லை.


இதனை கண்டுபிடித்த ரசிகர்கள், 'இதிலுமா சோம்பேறித்தனம்..? படமாவது ஒழுங்கா எடுக்கிறீர்களா..?' என சகட்டு மேனிக்கு விமர்சித்து வருகின்றனர்.