Breaking News

ஆபாசப் பேச்சு விவகாரம்! KL ராகுலுக்கு சின்மயி ஆதரவு!


singer chinmayi
"காபி வித் கரண்" எனும் நிகழ்ச்சியில் பெண்களை பற்றி ஆபாசமாக பேசியதால் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட KL ராகுலுக்கு ஆதரவாக பாடகி சின்மயி கருத்து தெரிவித்து இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் இளம்வீரர்களான, KL ராகுல் மற்றும் ஹாட்ரிக் பாண்டையா அண்மையில் "காபி வித் கரண்" எனும் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர்.

Coffee with karan show
அதில், ஜாலியாக பேசுவதாக நினைத்துக்கொண்டு, பெண்களுடன் தாங்கள் செய்த சில்மிஷங்கள் குறித்து வெளிப்படையாக பேசி இருந்தார் பாண்டையா. அவருடன் இருந்த ராகுலும் அவற்றை எல்லாம் ஒப்புக் கொண்டு 'ஆமாம் சாமி' போடவே, பெரிய சர்ச்சையில் சிக்கி தவித்து வந்தனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இருவரும் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இதற்கு பலர் ஆதரவும், ஒரு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வரும் நிலையில், பாடகி சின்மயி, ராகுலுக்கு ஆதரவாக பேசி இருக்கிறார்.

Chinmayi Tweet
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், "KL ராகுலை இந்திய கிரிக்கெட் அணி நீக்கி இருப்பதற்கு என்ன காரணம் என்று புரியவில்லை, ஆபாசமாக பேசிய பாண்டையாவின் அருகில் அமர்ந்திருந்தது ஒரு குற்றமா..? இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று" என குறிப்பிட்டு இருந்தார்.