Breaking News

'விஸ்வாசம்' பார்த்து கண்ணீர் விடும் குழந்தைகள்...! இதுதாங்க உண்மையான வெற்றி...


தந்தை மகளுக்கானஅழகான உறவை மிகவும்சிறப்பாக எடுத்துரைத்திருந்த திரைப்படம் 'விஸ்வாசம்'. குடும்பங்கள் கொண்டாடும் ஒன்றாக, செண்டிமெண்ட் காட்சிகளால் ரசிகர்களை கட்டிப் போட்டு இருந்த இத்திரைப்படத்திற்கு, குடும்ப ரசிகர்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஆபாசம், கொடூர சண்டை காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள் என முகம் சுளிக்கும் காட்சிகள் ஏதும் இன்றி, குடும்ப ரசிகர்களும் ரசிக்கும் விதத்தில் உருவாகி இருந்த இத்திரைப்படத்தின் கடைசி 20 நிமிடங்கள் எப்பேற்பட்ட கல்நெஞ்சு காரர்களையம் கண்ணீர் விட செய்துவிடும்.

படம் பார்த்து வெளியே வந்தவர்களுள் பெரும்பாலானோர், விஸ்வாசம் எபெக்ட்டில் கண் கலங்கியபடி வந்ததையும் பல திரையரங்குகளில் பார்க்க முடிந்தது.

இந்நிலையில், விஸ்வாசம் திரைப்பட கிளைமேக்ஸ் காட்சி பார்த்துவிட்டு பீல் ஆகி, இரு சிறுமிகள் கண்ணீர் விட்டு அழும் காட்சி வீடியோவாக வெளியாகி இருக்கிறது.



இப்படி குழந்தைகளின் மனதையும் டச் செய்யும் அளவிற்கு உருவாகி இருக்கிறது என்றால், இந்த குழந்தைகளின் கண்ணீரே விஸ்வாசத்திற்கு கிடைத்த உண்மையான வெற்றியின் ஆதாரம்..!