Breaking News

"பேட்டையின் சேட்டை தொடரட்டும்" இது கீர்த்தி சுரேஷ் குசும்பு


ரஜினியின் பேட்ட திரைப்படம் கடந்த ஜனவரி 10ம் தேதி ரிலீஸ் ஆகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. உடன் வெளியான விஸ்வாசத்திற்கு  அடுத்த இடம்தான் என்றாலும், விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக 'பேட்ட' வெற்றி படமாகவே வலம்வருகிறது.

ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் நீண்ட நாள் கழித்து பழைய சூப்பர் ஸ்டாரை இந்த திரைப்படத்தில் பார்க்க முடிந்ததாக நேர்மறை விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.


இப்படியொரு கருத்து தெரிவித்தவர்களில் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், தனுஷ் ஆகியோரும் அடக்கம். இந்நிலையில் சமீபத்தில் பேட்ட திரைப்படம் பார்த்த நடிகை கீர்த்தி சுரேசும், அப்படம் குறித்த தனது கருத்தை தெரிவித்து இறுக்கிறார்.

ரஜினியின் '27 ஆண்டு' கால சாம்ராஜ்யத்தை தகர்த்த தல அஜித்

நவாஸுதீன் சித்திக், சிம்ரன், விஜய் சேதுபதி என அப்படத்தில் பல பிரபலங்களின் நடிப்பை பற்றி புகழ்ந்திருந்த அவர், பேட்டையின் சேட்டையான வேட்டை தொடரட்டும் என வேடிக்கையாகவும் பதிவு செய்திருக்கிறார்.


இவரது இந்த பதிவு குறித்து ரசிகர்கள் பலர், 'என்னமா T.R மாதிரி பேச ஆரம்பிச்சிட்ட..?' என கிண்டலாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.