Thursday, 3 January 2019

தலயா..? தளபதியா...? ரசிகர்களை ஒரே பதிலால் அலறவைத்த மஞ்சிமா


இன்றைய தலைமுறையில், நேர்காணல் என்றால் நடிகர் நடிகைகளிடம் கேட்கப்படுபவற்றில் தல, தளபதி குறித்த கேள்வி கண்டிப்பாக இருக்கும். அப்படி பட்ட கேள்விகளுக்கும் பெரும்பாலும் பொதுவாக பதில் அளித்து தப்பி விடுவதும் பிரபலங்களின் வழக்கம்.

அந்த அளவிற்கு, விஜய் மற்றும் அஜித்தின் ரசிகர்களின் ஆதரவு குறித்த யோசனை வளர்ந்து வரும் பிரபலங்களை ஆட்கொண்டு இருக்கிறது(பின்ன., எவன் பேஸ்புக், ட்விட்டர்ல திட்டு வாங்குறது...!)

ஒருபுறம் இப்படி இருக்க, நடிகை மஞ்சிமா மோகனோ அவரும்தான், இவரும்தான் என மழுப்பாமல், அவர் தான் என நெத்தியடியாக பதில் அளித்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.


புது வருட ஸ்பெஷலாக, பிரபல டிவி நிகழ்ச்சி ஒன்றில் நடிகை கீர்த்தி சுரேஷ் கலந்து கொள்ள, அவரோடு போனில் பேசிய மஞ்சிமாவிடம் "உன்னிடம் தல படத்தில் நடிப்பாயா, தளபதி படத்தில் நடிப்பாயா என கேள்வி எழுப்பினால் என்ன சொல்வாய்" என கீர்த்தி கேள்வி எழுப்ப, "அதில் என்ன சந்தேகம் கண்டிப்பா தளபதிதான், தல நெக்ஸ்டு தான்" என ஒரே போடாக போட்டார். 

இப்படி வாய்ப்பு குறித்தும், தல ரசிகர்களின் வசவு குறித்த பயம் இல்லாமல் அவர் வெளிப்படையாக பதில் கூறியதை பார்த்து, நம்மை போல நடிகை கீர்த்தி சுரேஸும் "உனக்கு தைரியம் ஜாஸ்திதான்மா" என வியந்து தெரிவித்தார்.  

 
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();