Tuesday, 8 January 2019

விஸ்வாசத்தின் 'கண்ணான கண்ணே' இந்த பாடலின் காப்பியா...? ரசிகர்கள் வெளியிட்ட ஆதாரம்


பொங்கல் ஸ்பெஷலாக வருகிற ஜனவரி 10ம் தேதி விஸ்வாசம் திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் அப்படத்தில் இடம் பெற்றிருக்கும் 'கண்ணான கண்ணே' பாடல் பிரபல தமிழ் பாடல் ஒன்றிலிருந்து காப்பி அடிக்கப்பட்டு இருப்பதாக வீடியோ வெளியிட்டு இருக்கின்றனர் ரசிகர்கள் சிலர்.


சிவாவின் இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் விஸ்வாசம். இதற்கு இமான் இசையமைத்து இருக்கிறார்.

இத்திரைப்படத்தின் பாடல்களை அனைத்தும் ஏற்கனவே வெளியாகிவிட்ட நிலையில், 'கண்ணான கண்ணே' எனும் பாடல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று இருந்தது.


இந்த பாடலின் வெற்றி ஒருபுறம் இருக்க, இப்பாடல் 16 வயதினிலே படத்தில் இடம் பெற்று இருந்த செந்தூரப்பூவே பாடலின் காப்பி என இரண்டு பாடல்களையும் ஒப்பிடும் வீடியோ ஒன்று இணையத்தை சுற்றி வருகிறது.





Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();