Monday, 21 January 2019

தமிழ் மொழிக்கே இசையமைக்கும் 'இமான்'...! கொண்டாடும் திரையுலகம்


கனடாவை சேர்ந்த உலகப்புகழ்பெற்ற, 'டொரண்டா' பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி ஆராய்ச்சிக்கான இருக்கை சென்ற வருடம் நிறுவப்பட்டது. இந்த இருக்கைக்கான கீதம் இயற்றும் பணிகள் தற்பொழுது நடைபெற்று வரும் நிலையில், அதற்கான இசையமைப்பாளராக D.இமான் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.  

வரலாற்று சிறப்பு மிக்க மொழிகளுக்கு மட்டுமே அமைக்கப்படும் இருக்கைகள் தமிழ் மொழிக்கென, ஹார்வார்ட் மற்றும் டொராண்டோ பல்கலைக்கழகங்களில் நிறுவப்பட்டது தமிழர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.

இந்த இருக்கைகளுக்காக, கமல் உள்ளிட்ட தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் நன்கொடை வழங்கி இருந்தனர். மேலும் வெளிநாடு வாழ் தமிழர்கள் சார்பிலும் பொருளுதவிகள் செய்யப்பட்டது. 


ஒவ்வொரு மொழிக்கென கீதங்கள் இந்த பல்கலைக்கழகங்களில் நிறுவப்பட வேண்டியது கட்டாயம் எனும் நிலையில், டொராண்டோ பல்கலைக்கழகத்திற்கான கீதத்தை இயற்றும் பணியானது இசையமைப்பாளர் இமானிடம் கொடுக்கப்பட்டு உள்ளது.

இப்படியொரு பெருமை மிக்க பணியானது, அவருக்கு கிடைத்திருப்பதை ஒட்டி தமிழ் திரையுலகினர் பலரும் இமானுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();