Tuesday, 29 January 2019

இளையராஜா இசைக் கச்சேரி விவகாரம்..! கடும் கோபத்தில் சினிமா பிரபலங்கள்


வருகிற பிப்ரவரி மாதம் இசைஞானி இளையராஜா அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக, 'இசைஞானி 75' என்ற பெயரில் இசைக்கச்சேரி ஒன்றினை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நடத்த இருக்கிறது.

பிப்ரவரி 2,3 ஆகிய இரு தினங்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், முதல் நாள், சினிமா பிரபலங்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. இந்நிலையில் இதனை ஏற்பாடு செய்யும் தயாரிப்பாளர் சங்க குழுவின் மீது அதிருப்தி தெரிவித்து வருகின்றனர் திரையுலக பிரபலங்கள்.

இது சம்பந்தமாக வெளிவந்துள்ள தகவலின் படி, தயாரிப்பாளர் சங்க தலைவரான விஷால்,  'இசைஞானி 75' விழா ஏற்பாடுகளை கவனித்து கொள்ளும் பொறுப்பை தனது நண்பர் ராணாவிடம் ஒப்படைத்து இருப்பது தெரிய வந்துள்ளது.


அவரோ, குறிப்பிட்ட கலைநிகழ்ச்சிகளுக்கு 'பிரபலங்களை ஒப்பந்தம் செய்து விடுவதும், பின்னர் அவர்களை நீக்கி விட்டு மற்றொருவை ஒப்பந்தம் செய்வதுமென' பலரை அலைக்கழித்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதனால் தங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலை காரணம் காட்டி, இளையராஜா 75 விழாக்குழுவினரை திட்டி தீர்த்து வருகின்றனராம் திரையுலக பிரபலங்கள்.



Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();