Breaking News

தியேட்டரை புரட்டிபோட்ட 'விஸ்வாச' ரசிகைகள்..! வைரல் வீடியோ


தமிழ் ரசிகர்கள் சினிமாவை பிற மாநிலத்தவர்களை போல அல்லாது, தங்களது மற்றொரு கண்ணாகவே பார்க்கும் அளவிற்கு தீவிரம் காட்டுபவர்கள்.

இவர்கள் தீபாவளி, பொங்கலை கொண்டாடியதை விட அந்த தினங்களில் வெளியாகும் அஜித், விஜய் போன்ற நடிகர்களின் படங்களை கொண்டாடியதுதான் அதிகம்.


அந்த வகையில் பொங்கல் பண்டிகை சிறப்பாக வெளியாகி இருக்கும் விஸ்வாசம், பேட்ட ஆகிய படங்களை ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.

அப்படி முதல் நாள், முதல் காட்சியில் நிகழ்ந்த கொண்டாட்டங்களின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பட்டையை கிளப்பி வருகிறது. அதிலும் குறிப்பாக,

விஸ்வாசம் திரைப்பட அடிச்சி தூக்கு பாடலுக்கு அஜித் ரசிகைகள் சிலர் திரையின் முன் குத்தாட்டம் போடும் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பெரும்பாலும் ஆண் ரசிகர்களே இந்த வித அலப்பறைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், "நாங்களும் ஆடுவோம்ல" என அஜித் ரசிகைகள் குத்தாட்டம் போடும் இந்த காணொளியை நீங்களும் கண்டுகளியுங்கள்.