Breaking News

'பேட்ட' திரையரங்கை திருமண மேடையாக்கிய வாலிபர்!!! சென்னையில் சுவாரஸ்யம்


ரஜினி, விஜய், அஜித் போன்ற ரசிகர்களுக்கு தமிழகத்தில் இருக்கும் ரசிகர்கள் குறித்து நாம் கூறி தெரியவேண்டியதில்லை. அவர்களுக்காக எதையும் செய்யும் அளவிற்கு அன்பு வெறி பிடித்த ரசிகர்களும் இங்கு உண்டு.

அப்படிப் பட்ட தீவிர ரஜினி ரசிகர்களில் ஒருவர், பேட்ட திரைப்பட திரையரங்கிலேயே திருமணம் செய்து பலரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்.

குறிப்பிட்ட வாலிபர் சென்னையை சேர்ந்த அன்பரசு என்பது தெரியவந்துள்ளது. இவர் இன்று, சென்னையில் உள்ள உட்லண்ட்ஸ் திரையரங்க வளாகத்தில் அதிகாலை காட்சியின் போது மணப்பெண் காமாட்சிக்கு, பிற ரசிகர்களின் கரகோசத்தை கெட்டி மேளமாக்கி தாலி கட்டி திருமண பந்தத்தில் இணைந்திருக்கிறார்.

பின்னர் இந்த புதுமண தம்பதியினர், பேட்ட திரைப்படத்தினை உற்சாகமாக கண்டுகளித்தனர்.