Breaking News

'பேட்ட'யை துரத்தும் பொய் விமர்சனங்கள்... சன்பிக்சர்ஸ் ருத்ரதாண்டவம்


சன்பிக்சர்ஸ் நிறுவன தயாரிப்பில், கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் திரைப்படம் 'பேட்ட'. பொங்கல் ஸ்பெஷலாக கடந்த 10ம் தேதி ரிலீஸ் ஆன இப்படம் குறித்த நெகட்டிவ் விமர்சனங்களால் கடுப்பாகியுள்ளது குறிப்பிட்ட தயாரிப்பு நிறுவனம்.

இந்த ஆன்லைன் யுகத்தில், சில்லறை வியாபார பொருட்கள் முதல், கோடி ரூபாய் மதிப்புடைய அறிய பொருட்கள் வரை இணையத்தில் கிடைக்கிறது.

அதுபோலவே, புதிய படங்களின் நிலைமையை தெரிந்து கொள்ள ஞாயிற்று கிழமை வரை காத்திருந்து திரை விமர்சனம் நிகழ்ச்சியை பார்த்த நிலைமை மாறி, படம் வெளியான அடுத்த செகண்டே கிடைத்துவிடும், ப்ளூ சட்டை மாறன் போன்ற ஆன்லைன் விமர்சகர்களை நாடி மக்கள் செல்ல துவங்கி இருக்கின்றனர்.


பட வசூலிலும் இவர்களது விமர்சனங்கள் பெரும் பங்கு வகிப்பதால், பல்வேறு தயாரிப்பு நிறுவனங்கள் காசு கொடுத்து இவர்களை பேச வைப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

மேலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் முன்னரே இந்த படம் இவ்வளவு வசூல் என பதிவிடும் ஆன்லைன் மூவி டிராக்கர்ஸ்ஸும் அவர்கள் இஷ்டத்துக்கு, ப்ரமோஷன் எனும் பெயரில் அடித்து விட துவங்கி இருக்கின்றனர்.


இவர்களது செயல்களினால், சமீபத்தில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் பேட்டையை விட பிரமாதமாக சென்று கொண்டிருப்பதாக ஒரு பேச்சு சமூக வலைத்தளங்களை சுற்றி வருகிறது. இத்தகைய நெகட்டிவ் விமர்சனங்களால், பேட்ட திரைப்படத்திற்கு வரும் ரசிகர்களின் கூட்டம் குறையலாம் என பதறிய சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம்,

'எங்களுக்கே இன்னும் உண்மையான வசூல் விவரம் தெரியாதபோது, நீங்கள் எப்படி அதனை கூற முடியும்? ரசிகர்களே இது போன்ற போலியான தகவல்களை நம்ப வேண்டாம், உங்களது பேவரைட் நடிகர்களின் படங்களை தியேட்டரில் சென்று கண்டுகளியுங்கள்' என பதிலடி கொடுக்கும் விதத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளது.