Tuesday, 15 January 2019

தமிழகத்திற்கு கிடைத்த வைரம் தேவயானி..! நீங்கள் அறியா சுவாரஸ்ய தகவல்கள்


நடித்தோமா, பணக்கார தொழிலதிபரை மணந்து சென்றோமா என்றில்லாமல் 'இப்படியும் ஒரு நடிகையா' என நம்மை வியக்க வைப்பவர்களுள் தேவயானியும் ஒருவர். அஜித், விஜய், விக்ரம், விஜயகாந்த், சரத்குமார் என தனது கால ட்ரெண்டிங் நடிகர்கள் பலருடன் ஜோடிபோட்ட இவர் கிட்டத்தட்ட 75 படங்களுக்கும் மேல் நாயகியாக நடித்தவர்.

தான் உச்சத்தில் இருந்த காலத்திலேயே அழகும் திறமையும் வாய்ந்த பல நடிகர்கள் இவரிடம் காதலை சொல்லி இருக்க, 'அழகு முக்கியமல்ல மனது தான் முக்கியம்' என இயக்குனர் ராஜகுமரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  


நேற்று திருமணம், இன்று விவாகரத்து என இல்லற வாழ்க்கையை உடனே முடித்துக் கொள்ளும் பல பிரபலங்களுக்கு இடையே, 17 வருடங்கள் மகிழ்ச்சியோடு இந்த தம்பதி வாழ்ந்து வருவதே அதற்க்கு சான்று.

 அழகிய தமிழ் குடும்பத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வரும் இவருக்கு, அவரைப் போன்றே இனியா, ப்ரியங்கா என்ற இரு அழகிய பெண் குழந்தைகள். மும்பையை பூர்வீகமாக கொண்டாலும்,  தமிழ் கலாச்சாரத்தை ஏற்று அக்மார்க் தமிழகத்து மருமகளாகி இருக்கும் இவருக்கு, விவசாயத்தின் மீது இருக்கும் காதலும் வியப்பிற்குரியது.


கணவரின் சொந்த ஊரான, ஈரோடு, ஆலயங்கரடு கிராமத்தில் பண்ணை வீடு வாங்கி விடுமுறை தினங்களில் விசிட் அடித்து வரும் அவர். அந்நிலத்தில் விவசாயமும் செய்து வருகிறார். தனது நிலத்திற்கு அருகே இருந்த விவசாய நிலம், பிளாட் போட்டு விற்கப்படுவதை அறிந்து மனம் வருந்திய அவர், உடனே அந்நிலத்தையும் வாங்கி பூக்கள் குலுங்கும் தோட்டம் ஆக்கி இருக்கிறார்.

சினிமா இல்லைனா சின்னத்திரை, அதுவும் இல்லனா விபச்சாரம் என ஆடம்பர செலவு செய்து வாழ்க்கையை தொலைத்த நடிகைகளுக்கு மத்தியில், வெறும் 10 ஆயிரம் சம்பளத்திற்கு ஆசிரியராக பணி புரிந்தும் இப்படியும் கண்ணியமான வாழலாம் என நடிகைகளுக்கு பாடம் நடத்தியவர்.


ஒரு திரைப்படம் நடித்து விட்டாலே, கண் கூசும் ஆபாச உடைகள், சனி இரவு கிளப் ஆட்டங்கள் என அமெரிக்க வாழ்க்கை முறைக்கு தாவிவிடும் பல பிரபலங்களுக்கு மத்தியில், தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்ட நடிகையாக இருந்தும், இன்று வரை புடவையில் தோன்றி குடும்ப உறவுகளுக்கு மதிப்பளிக்கும் ஒருவராக, பலர் மறந்து போன கலாச்சாரங்களை கடைபிடிக்கும் அக்மார்க் தமிழச்சியாக வலம்வருகிறார்.


இப்படி ஆடம்பரம் நோக்கி சென்று சீரழியும் நடிகைகளை பின்பற்றி 'இதுதான் நாகரீகம்' என நினைக்கும் இளசுகள், ஒரு கோடீஸ்வரியாக இருந்தும் சிம்பிளாக வாழும் தேவயானியே நமது கலாச்சாரத்தின் அடையாளம் என புரிந்து கொண்டால் நம் கலாச்சாரம் செழிக்கும். 
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();