Breaking News

நாயகனாகும் சூர்யாவின் மகன் 'தேவ்'... அதுவும் இந்த சூப்பர் கதையில்


சினிமா பிரபலம் பலரது வாரிசுகளுக்கு சினிமா பட வாய்ப்பு என்பது மிகச் சாதாரணமாக ஒன்று. ஆனாலும் பெரும்பாலானவர்கள் 'பிள்ளைகளின் படிப்பு முடியட்டும்' என தேடி வரும் வாய்ப்புகளை தவிர்த்து விடுவதும் வழக்கம் .

ரோபோ சங்கரின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய செல்ல மகள்

இப்படி, தன் மகன் தேவிற்கு வந்த பல படவாய்ப்புகளை தட்டிக் கழித்து வந்த நடிகர் சூர்யா, அருமையான கதை ஒன்று வரவே, அவரை  நடிக்க வைக்க டபுள் ஓகே சொல்லி இருக்கிறாராம்.  


அண்மையில் நடிகர் சூர்யாவையும், ஜோதிகாவையும் சந்தித்து கதை கூறி இருக்கிறார் புதுமுக இயக்குனர் ஒருவர். சுட்டிப் பையனுக்கும், நாய் குட்டி ஒன்றிற்கு இடையே நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்களை  கதைக்களமாக கொண்ட இத்திரைப்பட கதையை கேட்டதுமே இருவருக்கும் மிகவும் பிடித்து விட்டதாம்.


பிரமாண்ட நடிகர் நடித்தும் கதை சரி இல்லை என்றால், ரசிகர்கள் திரும்பி கூட பார்க்க மாட்டார்கள், என்பதை சமீப காலமாக பல படங்கள் நிரூபித்து விட்ட நிலையில், தன் மகனை தேடி வந்த ஒரு நல்ல கதையை இழக்க விரும்பாத இந்த நட்சத்திர தம்பதி, அவரை நடிக்க வைக்கும் பணிகளில் முழுமூச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.