Breaking News

ஓடிப்போன காதல் மனைவி..! லெஜெண்ட் இயக்குனருக்கு வந்த சோதனை


திரையுலகில் கொடிகட்டி பறக்கும் நட்சத்திரங்கள் ஏனோ நிஜ வாழ்க்கையை கோட்டை விட்டு விடுகின்றனர். காதலித்து திருமண பந்தத்தில் இணைபவர்களும் ஒரு வருடத்திற்கு உள்ளாகவே விவாகரத்து கோரி நிற்கும் சம்பவங்கள் கோடம்பாக்கத்திற்கு ஒன்றும் புதிதல்ல.

அப்படி, 'விவாகரத்து வாங்கி சென்றாலாவது பரவா இல்லையே, இப்படி மானத்தை வாங்கி சென்று விட்டாலே' என புலம்பி தவித்து வருகிறார் தமிழ் சினிமாவின் லெஜெண்ட் இயக்குனர் ஒருவர்.


தற்பொழுது முன்னணியில் இருக்கும் பல தமிழ் திரைப்பட நடிகர்களுக்கு வெற்றி படங்களை கொடுத்தவர் அந்த இயக்குனர். இவர் நடிக, நடிகைகளிடம் வேலை வாங்கும் விதம் என்னதான் சர்ச்சையான ஒன்றாக இருந்தாலும், விருது வாங்கும் அளவிற்கு படத்தினை பக்காவாக உருவாக்கிவிடுவது இவரது சிறப்பு.

இப்படி நடிக, நடிகைகளை அலறவிடும் அளவிற்கு டெரரான இவர், 'இந்த பூனையும் பால் குடிக்குமா' என ஆச்சர்யப்படும் விதத்தில், படப்பிடிப்பை காண வந்த வெள்ளை ரோஜாவிடம்  இதயத்தை பறிகொடுத்தார். அந்த வெள்ளை ரோஜாவும் இயக்குனருக்கு தூரத்து சொந்தமாகிவிட, உடனே நடந்தது திருமணம்.    



சில வருடங்கள் சுமூகமாக சென்ற இந்த பந்தம், எவர் கண் பட்டதோ தெரியவில்லை, கள்ளக்காதல் விவகாரத்தால் உடைந்துள்ளது. இயக்குனரோ படப்பிடிப்பிற்காக தனது மனைவியை சொந்த ஊரில் விட்டு விட்டு வெளியூர் சென்றுவிட, கிடைத்த கேப்பில் கிடா வெட்டி இருக்கிறார் மனைவியின் உறவுக்கார வாலிபர் ஒருவர்.


இருவருக்கிடையேயுமான கள்ளக்காதல் முற்ற, சமீபத்தில் ஓட்டம் பிடித்திருக்கிறது இந்த செக்சன் 497 ஜோடி. வெளியே சொன்னால் வெட்கக்கேடு என்பதனால் இயக்குனர் தரப்பும் சைலண்டாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது.