Breaking News

நடிகையுடன் ரகசியமாக ஊர் சுற்றும் அரசியல்வாதி நடிகர் - சினிமா கிசு கிசு


நடிப்பின் உச்சம் என பெயர் எடுத்த பிரபல மூத்த நடிகர், நடிகை ஒருவரோடு ரகசியமாக ஊர் சுற்றி வருகிறாராம்.

நடிப்பில் இவரை அடித்துக் கொள்ள முடியாது என்று பெயர் எடுத்த இந்த நடிகர், இன்றளவும் நடிகைகளுடனான கிசு கிசுக்களில் தொடர்ந்து சிக்கி வருபவர்.

'ஒரு பெரிய மனுஷன் செய்யிற காரியமா இது..?' என அவரது ரசிகர்களே முகம் சுளிக்கும் அளவிற்கு நடிகைகளுடன் நெருக்கமாக நடித்து வரும் இவர், நிஜ வாழ்விலும் அவர்களுடன் நெருக்கம் காட்டி விடுவதாக கிசு கிசுக்கிறது கோலிவுட் வட்டாரம்.


தொன்று தொட்டே இத்தகைய கிசு கிசுக்களில் சிக்கி வரும் நடிகர் தற்பொழுது, அடுத்தடுத்து தனது மூன்று படங்களில் நடித்த நடிகை ஒருவருடன் ரகசியமாக ஊர் சுற்றி வருகிறாராம்.

அரசியலிலும் முக்கிய பங்கு வகிக்கும் இவர், இந்த விஷயம் வெளியே தெரிந்தால் வெட்கக்கேடு ஆகிவிடும் என்பதனால், பார்த்து பார்த்து ரகசியமாக ரொமான்ஸ் செய்தாலும், 'உங்கள பத்திதான் ஊருக்கே தெரியுமே!' என தலைவரின் ரகசியத்தை போட்டு உடைத்து விட்டன ஊடகங்கள்.