Breaking News

"அவன் உன்ன ஏமாத்திடுவான்" இளம் நடிகைக்கு எச்சரிக்கை விடுக்கும் கோலிவுட்


கடித்தக் காதல், தெய்வீகக் காதல் என புனிதமான ஒன்றாக இருந்து வந்த ஒன்று, இன்று லிவிங்க் டுகெதர், பிரண்ட்ஸ் வித் பெனிஃபிட்ஸ் என்று வெளிநாட்டு கலாச்சாரத்திற்கு  இணையாக மாறி வருகிறது.

இதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைத்த பெருமை  நவீன கலாச்சாரத்தில் எப்பொழுதுமே ஒருபடி மேலே இருக்கும் நம் திரையுலகினரையே சாரும்.

அப்படிப்பட்ட பிளேபாய் நடிகர்களுக்கெல்லாம், உச்சமமாக விளங்குபவர் இந்த நடிகர். தற்பொழுது முன்னணியில் இருக்கும் பெரும்பாலான நடிகைகளுடன் எல்லாம் கிசு கிசுக்களில் சிக்கிய இவர், டிவி நிகழ்ச்சி ஒன்றின் மூலம் ஊரறிய கூத்தடித்தார்.



இப்படிப்பட்ட பெருமை மிக்க நாயகருடன் காதல் வலையில் சிக்கி இருக்கிறார் இளம் நடிகை ஒருவர். தனது நடனத்தில் ரசிகர்களை வாய்பிளக்க வைக்கும் அந்த நடிகை, அறிமுகமான வேகத்திலேயே முன்னணி நாயகர்களுடன் ஜோடிபோட துவங்கிவிட்டார்.

தற்பொழுது முன்னணி நாயகி எனும் இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் இவரை தனது ஜாலியான பேச்சால் வளைத்துப் போட்டு இருக்கிறார் அந்த பிளே பாய் நடிகர்.

இருவருக்கும் விரைவில் திருமணம் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், நாயகிக்கு நெருக்கமான சக திரைத்துறையினர், நடிகரின் சேட்டைகளை பற்றி கூறி எச்சரிக்க துவங்கி இருக்கிறார்களாம்.