Thursday, 17 January 2019

'அய்யயோ அந்த இசையமைப்பாளரா'..? தெறித்து ஓடும் இயக்குனர்கள்


தங்களுடன் பணியாற்றியபோது நல்ல அனுபவத்தை கொடுக்கும் பணியாளர்களுக்கே மீண்டும் மீண்டும் வாய்ப்புகள் வழங்கப்படுவது, அகில உலக வழக்கம். ஆனால் கொடுப்பது பெரும்பாலும் சங்கடம் தான் எனும் பட்சத்தில், பிரபல இசையமைப்பாளரை தவிர்த்து வருகின்றனராம் டாப் இயக்குனர்கள்.

தமிழ் சினிமாவில் வாரிசு இசையமைப்பாளராக இருந்தும், தனது சொந்த முயற்சியாலும் திறமையாலும் சிறந்த இசையமைப்பாளர் என்ற பெருமையை அடைந்தவர் இவர்.

சில வருடங்களுக்கு முன்புவரை, வரிசையாக மெகா ஹிட் பாடல்களை கொடுத்து வந்த இவருக்கு, இரண்டாம் கட்ட நாயகர்களுக்கு இணையாக, ரசிகர் பட்டாளங்கள் உள்ளனர்.



இவரது இசைத்திறமையை ஒட்டுமொத்த திரையுலகமும் பாராட்டி வந்த நிலையில், சமீபத்திய நட்புவட்டாரங்களால் அவப்பெயரை சந்தித்து வருகிறார் இந்த இசையமைப்பாளர்.

"நினைத்த நேரத்தில் இவரை இயக்குனர்கள் சந்திக்க முடியாது. ஒப்பந்தமான இயக்குனர்களை இசை அமைத்து கொடுப்பதற்குள் படாத பாடு படுத்தி விடுவது, 'மூட் இல்லை' எனக்கூறி, இசையமைக்காமல் படக்குழுவினரை அலையவிடுவது" என இவர்மீது புகார்கள் நீள்கின்றன.

இதனால் பாதிக்கப்பட்ட இயக்குனர்கள் பலர், 'தயவு செய்து அவரை புக் செய்து அல்லோல் படாதீர்கள்' என பிற இயக்குனர்களை எச்சரித்து வருகின்றனராம். இதன் காரணமாகவே பல ஆண்டுகள் முன்னணியில் இருந்தும், பிரமாண்ட இயக்குனர்கள் படங்களில் இவர் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என கிசு கிசுக்கிறது சினிமா வட்டாரங்கள்.
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();