Saturday, 19 January 2019

ஆம்பளைங்க மட்டும் பண்ணலாம் நாங்க பண்ண கூடாதா..? கொதித்தெழுந்த சின்மயி


பாடகி சின்மயி, '10 இயர்ஸ் சேலஞ்ச்' எனும் பெயரில் நடிகை ப்ரியங்கா சோப்ரா கிண்டல் செய்யப்பட்டதற்கு எதிராக கொதித்தெழுந்து இருக்கிறார்.

'மீட்டு' விவகாரம் மூலம், சுஜி லீக்ஸ் சுஜியை விட அதிக அளவில் பேசப்பட்டவர் பாடகி சின்மயி. தமிழகத்தில் அந்த இயக்கத்தின் தலைவி போல செயல்பட்டு பல சினிமா கிசு கிசுக்களை வெளிச்சம் போட்டு காட்டிய பெருமையும் இவருக்கு உண்டு.


'மீட்டு' மட்டுமல்லாது பிற சமூக பிரச்சனைகள் குறித்தும் இவர் தொடர்ந்து பேசிவரும் நிலையில், சமூக வலைத்தளங்களில், 'ப்ரியங்கா சோப்ரா' தன்னை விட 10 வயது இளையவரான நிக் ஜோனாசை மணந்தது குறித்த கேலிப்பேச்சுகளுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

தற்போதைய ட்ரெண்டான, '10 இயர்ஸ் சேலஞ்சில்' பலர் தங்களது 10 வருடங்களுக்கு முந்தைய பழைய புகைப்படங்களை, தற்போதைய புகைப்படத்துடன் ஒப்பிட்டு பதிவிட்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, ரசிகர் ஒருவர் ப்ரியங்கா சோப்ரா வின் '10 இயர்ஸ் சேலஞ்ச்' புகைப்படம் என கீழே உள்ள புகைப்படத்தை பதிவிட்டு கலாய்த்திருந்தார்.

இதற்கு பாடகி சின்மயி, ஆண்கள் மட்டும் தங்களை விட 25 வயது இளைய பெண்கள் வரை திருமணம் செய்யும் போது, பெண்கள் திருமணம் செய்தால் மட்டும் கிண்டல் செய்வீர்களா என்று பதிலித்து இருக்கிறார். 
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();