Breaking News

ஆபாச இணையதளத்தில் தனது வீடியோ..! பொங்கி எழுந்த சின்மயி


'மீட்டூ (MeToo)' விவகாரம் குறித்து வாய் திறந்தது முதல் நாளுக்கு நாள் சர்ச்சைகளில் சிக்கி தவித்து வருகிறார் பாடகி சின்மயி.

தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரின் அந்தரங்க மறுபக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டிய இவரை பலர் பாராட்டி வந்தாலும், 'தனது விளம்பரத்திற்காக இதனை செய்வதாக' விமர்சனங்களையும் சந்தித்தார்.


அத்தகைய விமர்சனங்களுக்கு, வெளிப்படையாக விமர்சகர்களின் பாணியிலேயே அஞ்சாது பதிலளித்து வரும் இவர், ரசிகர் ஒருவரது வேண்டுகோளுக்கு அளித்த பதில் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

குறிப்பிட்ட ரசிகர், இவ்வளவு புரட்சிக்கரமான விஷயங்களை செய்யும் நீங்கள் ஏன், மாடர்ன் உடைகளை தவிர்த்து இந்திய பாரம்பரிய உடையான சேலையில் தோன்றி இளம்பெண்களுக்கு முன் உதாரணமாக இருக்க கூடாது என கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு சின்மயி, அப்படி சேலையில் தோன்றினால், சிலர் தனது இடுப்பு மற்றும் மார்பு தெரியும் படி புகைப்படம் எடுத்து, ஆபாச இணையத்தளங்களில் பதிவு செய்துவிடுவதும், அந்த புகைப்படங்களை தனக்கே அனுப்பி கீழ்த்தரமாக பேசுவதையும் தவிர்க்கவே பாரம்பரிய உடைகளை தவிர்ப்பதற்காக பதில் அளித்து இருந்தார்.