Breaking News

'விஸ்வாசம்' எஃபெக்ட்... அஜித்தின் பவரை கண்டு மிரண்ட போனிகபூர்..!


பிரபல பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளரும், நடிகை ஸ்ரீ தேவியின் கணவருமான போனிகபூர், 'விஸ்வாசம்' திரைப்படத்தை ரசிகரோடு ரசிகராக இன்று காலை கண்டுகளித்துள்ளார்.

நடிகை  ஸ்ரீதேவியின் மறைவுக்கு பின்னர், அவருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றும் விதமாக நடிகர் அஜித், போனிகபூர் அவர்கள் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

பாலிவுட்டில் மாபெரும் வெற்றி பெற்ற 'பிங்க்' திரைப்படத்தின் ரீமேக் ஆக உருவாக இருக்கும் இத்திரைப்படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது.


விரைவில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் துவங்க உள்ள நிலையில், நடிகர் அஜித்தின் ரசிகர்களின் படையை நேரில் கண்டு வியந்திருக்கிறார் போனிகபூர்.

அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகி இருக்கும் நிலையில், சென்னை கங்கா தியேட்டரில் ரசிகரோடு ரசிகராய் அதிகாலை காட்சியினை கண்டுகளித்தார் போனிகபூர்.


ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என தியேட்டரே களைகட்டிய நிலையில், நடிகர் அஜித்திற்கு தமிழகத்தில் இருக்கும் பவரை கண்கூடாக கண்டு வியந்திருக்கிறார். இதனை பிரபல
செய்தித்தாள் ஒன்றிற்கு அளித்த பேட்டியிலும் அவர் கூறி இருந்தார்.