Breaking News

எவனா இருந்தாலும் வெட்டுவேன்!!! சினிமா பாணியில் மிரட்டல் விடுத்த ப்ளூ சட்டை மாறன்


பிரபல ஆன்லைன் திரைப்பட விமர்சகரான, ப்ளூ சட்டை மாறன் கொலை மிரட்டல் விடுத்ததாக, சார்லி சாப்ளின் திரைப்பட இயக்குனர் சக்தி சிதம்பரம், காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறார்.

யூட்யூப் சமூக வலைத்தளத்தில், தனது எதிர்மறை திரைப்பட விமர்சனங்கள் மூலம் பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன். எப்பேற்பட்ட நல்ல திரைப்படமாக இருந்தாலும் இவரிடம் நேர்மறை விமர்சனத்தை பெற்றுவிடமுடியாது.

அண்மையில் வெளியான, விஸ்வாசம், பேட்ட போன்ற நல்ல திரைப்படங்களுக்கும் இவர் எதிர்மறை விமர்சனம் அளித்தததே இதன் சான்று.

இந்நிலையில், 'நேர்மறை விமர்சனம் செய்ய பணம் தரக்கோரி, புது பட தயாரிப்பாளர்களை  அவர் அணுகுவதும், கொடுக்க மறுப்பவர்களின் படங்களுக்கு எதிர்மறை விமர்சனங்களை அவர் அளிப்பதாகவும்' ஒரு புகார் தற்பொழுது எழுந்துள்ளது.

இது சம்பந்தமாக, சென்னை கமிஷனர் அலுவலகத்தில், பிரபுதேவா நடித்து வெளியான, சார்லி சாப்ளின் 2 திரைப்பட இயக்குனர் சக்தி சிதம்பரம் புகார் ஒன்றினை அளித்து இருக்கிறார்.


அந்த புகாரில், கடந்த ஜனவரி 26ம் தேதி, மாறன் தங்களை தொடர்பு கொண்டு, 'சார்லி சாப்ளின் 2' திரைப்படத்தை விளம்பரம் செய்ய பணம் கேட்டதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்ட நிலையில், தங்கள் திரைப்படத்தை படுமோசமாகவும், படக்குழுவினரை கீழ்த்தரமாக விமர்சித்தும் வீடியோ வெளியிட்டிருந்ததாகவும், இது குறித்து கேட்ட போது,

'எனக்கு லாபம் வரவேண்டுமானால் என்னவேண்டுமானாலும் பேசுவேன். உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்துகொள். என்னிடம் மோதினால் உன்னை காலிசெய்யவும் தயங்கமாட்டேன்' என கொலை மிரட்டல் விடுத்ததாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் 'இது போன்று, சமூக வலைத்தளங்கள் மூலம் தவறான விமர்சனம் செய்து, தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும், 'தமிழ் டால்கிஸ்' சேனலை முடக்கவேண்டும். எங்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்திய ப்ளூ சட்டை மாறனின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்ற கோரிக்கையையும் அதில் குறிப்பிட்டு இருந்தார்.