Breaking News

"பிக்பாஸ் சீசன் 3"யை தொகுத்து வழங்க போகும் மூத்த நடிகர்


சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கடந்த இரு வருடங்களில் மக்களை அதிகம் கவர்ந்த  ஒன்றாக "பிக்பாஸ்" வலம்வருகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியின் வெற்றியில் அதன் தொகுப்பாளரின் பங்கும் அளப்பரியது.

தமிழ் மொழியில் இரண்டு வருடங்களும் கமல் ஹாசன் 'பிக்பாஸ்'ஆக அசத்தி இருந்தார். பிற மொழிகளிலும் பெரும்பாலும் ஒரே நடிகரே அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தனர்.

ஆனால் தெலுங்கில் மட்டும் முதல் சீசனில் நடிகர் NTR, இரண்டாவது சீசனில் நடிகர் நானி என நிலையற்ற தன்மை நிலவிவந்தது. இந்நிலையில் அடுத்த ஆண்டு வர இருக்கும் மூன்றாவது சீசனில் நடிகர் நானி பங்கு பெற இருப்பது கேள்வி குறி ஆகி இருக்கிறது.

மேலும் அவருக்கு பதிலாக, பிரபல மூத்த நடிகர் வெங்கடேஷ் அவர்களை நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஒரு தகவல் தெலுங்கு திரையுலகில் பரவி வருகிறது.