Breaking News

கோடிகளை தொட்ட அர்ஜுன் சம்பளம்..! கேட்பாரற்று கிடந்தவருக்கு அடித்த ஜாக்பாட்..!


ஆக்சன் கிங் அர்ஜுனின் 90 களை சேர்ந்த நாட்டுப் பற்று படங்களை ரசிக்காதவர்களே இருந்திருக்க முடியாது. அந்த அளவிற்கு உணர்வுப்பூர்வமாக அதிரடி கலந்து ரசிகர்களை கவர்ந்தவர் அவர்.

என்றாலும் அவரது இந்த பாணி சமீப காலங்களில் ஜொலிக்கவில்லை. அவர் ஹீரோவாக நடித்த பல படங்கள் பிளாப் ஆக மார்க்கெட் டல்லடித்துப் போனது.

இதனால் தனது சொந்த படங்களில் மட்டும் நடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் அர்ஜுன். இப்படியொரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்தவரை, மீண்டும் புத்துணர்வு பெற செய்திருக்கிறது விஷாலுடன் நடித்த இரும்புத்திரை திரைப்படம்.



அதில் அவர் நடித்த, வொயிட் டெவில் எனும் எதிர்மறை கதாப்பாத்திரம் இளம் ரசிகர்களை கவர, தொடர்ந்து அவருக்கு வில்லன் வாப்புக்கள் வந்து குவிக்கிறதாம் .

தமிழ்  மட்டுமல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு என பிற மொழிகளிலும் அவருக்கு வாய்ப்புகள் குவிய, லட்சங்களில் இருந்த தனது சம்பளத்தை கிடு கிடுவென இரண்டு கோடிக்கு உயர்த்தி இருக்கிறார்.