Thursday, 3 January 2019

"இவரோடு தான் திருமணம்" போட்டு உடைத்த எமி ஜாக்சன்


நடிகை எமி ஜாக்சன் தன்னை திருமணம் செய்து கொள்ள இருப்பவர் குறித்த தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறார்.

தமிழ் சினிமாவுக்கு லண்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நடிகை எமி ஜாக்சன். மதராசப்பட்டினம் படத்தின் மூலம் இந்திய திரையுலகில் அறிமுகமான இவரது நடிப்பில் இறுதியாக 2.0 திரைப்படம் வெளியாகி இருந்தது.

இந்திய திரையுலகில் மட்டுமல்லாது, அமெரிக்க டிவி தொடர் ஒன்றிலும் நடித்து வரும் இவரது, சமூக வலைத்தள பக்கங்கள் சூடான மற்றும் சர்ச்சை புகைப்படங்களுக்கு பெயர் போனது.

பிகினி, டாப்லெஸ், தோழிகள், தோழர்களுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு அவ்வப்போது சர்ச்சையை கிளப்பி வரும் இவர், கடந்த கிறிஸ்துமஸ் அன்று வாலிபர் ஒருவருக்கு உதட்டு முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

வழக்கம் போல அந்த புகைப்படத்தால், அந்த நபர் எமி ஜாக்சனின் காதலர் என்பது போல செய்திகள் வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து அந்த செய்திகளை உறுதி படுத்தும் விதமாக, புத்தாண்டு ஸ்பெஷல் பதிவில் அவரை காதலிப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருக்கிறார்.



மேலும் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், வைர மோதிரத்துடன் எமி ஜாக்சன் தோன்றி இருப்பதால் இருவருக்கும் நிச்சயம் செய்யப்பட்டு விட்டதாகவும், விரைவில் திருமணம் என்ற பேச்சும் அடிபட துவங்கி இருக்கிறது.

இப்படி எமி ஜாக்சனுடன் காதல் சர்ச்சையில் சிக்கி இருக்கும் அந்த இளைஞர் லண்டனை சேர்ந்த தொழிலதிபர்  ஜியார்ஜ் என்பதும் தெரியவந்துள்ளது.
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();