"அஜித் கண்டிப்பா அரசியலுக்கு வருவார்"! பரபரப்பை கிளப்பும் பெண் ஜோதிடர்
ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்கள் முதல் பிக்பாஸ் பிரபலம் ஜுலி வரை தாங்கள் அரசியலுக்கு வர இருப்பது குறித்து அறிவித்துவிட்ட நிலையில், "எனக்கும் அரசியலுக்கு சம்பந்தமில்லை" என விலகி நிற்கிறார், மாபெரும் ரசிகர் படைக்கு சொந்தக் காரரான "தல அஜித்".
ஆனால் "அவரே விட்டாலும் அவர் ஜாதகம் விடாது" என ஜோதிடத்தை மேற்கோள் காட்டி, 'தல அஜித் அரசியலுக்கு கண்டிப்பாக வருவார்' என குண்டை தூக்கி போட்டிருக்கிறார் பெண் ஜோதிடர் ஒருவர்.
குறிப்பிட்ட பெண் அளித்துள்ள பேட்டியில், "அவர் கஷ்டப்பட்டு அரசியலில் இடம் பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, 'மக்களே அவர் வரவேண்டும்' என அழைப்பு விடுக்கும் அளவுக்கு அற்புதமான ஜாதகம் அவருடையது" என பேசி இருக்கிறார்.