Tuesday, 15 January 2019

"ரசிகரை பார்க்க அஜித் வர்றாராமே..!" தீயாய் பரவிய வதந்தி..! ஸ்தம்பித்த வேலூர்


நடிகர் அஜித், ரசிகரை பார்க்க வருவதாக பரவிய வதந்தியால் ரசிகர்கள் படையெடுக்க, கூட்டத்தை கலைக்க போலீஸ் தடியடி நடத்த ஸ்தம்பித்துள்ளது வேலூர்.

கடந்த 10ம் தேதி வெளியான விஸ்வாசம் திரைப்படத்தால் ஏற்பட்ட விபரீத சம்பவங்களில் வேலூரை சேர்ந்த ரசிகர்கள் சிலர் கத்திக்குத்துக்கு ஆளானார்கள்.

இவர்கள் தற்பொழுது வேலூர் கிறிஸ்டியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில், இவர்களைப் பார்க்க நடிகர் அஜித் வருவதாக ஒரு வதந்தி பரவ துவங்கியுள்ளது.

வதந்தியை கிளப்பிய காணொளி

இதனால் அந்த பகுதியை சேர்ந்த ரசிகர்கள் அஜித்தை பார்க்கும் ஆர்வத்தில் மருத்துவமனையின் முன்பு கூட, கூட்ட நெரிசலாலும் ரசிகர்களின் ஆராவாரத்தாலும் இயல்பற்ற சூழ்நிலை அங்கு நிலவியுள்ளது.


மேலும் அருகிலிருந்த தேசிய நெடுஞ்சாலை வரை ரசிகர்கள் கூட கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு உள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, போலீசார் தடியடி நடத்தி ரசிகர்களை அங்கிருந்து விரட்டி அடித்துள்ளனர்.

இப்படி, பொது நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்ளாத அஜித் ரசிகரை பார்க்க வருகிறார் என்ற வதந்தியை உண்மை என எண்ணி, போலீசிடம் அடிவாங்கிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Disqus Comments
'