Breaking News

விஸ்வாசம் பார்த்த பின் அஜித்தின் ரியாக்சன்..! சிவா வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்


சிவாவின் இயக்கத்தில் நான்காவது முறையாக அஜித் இணைத்திருக்கும் திரைப்படம் விஸ்வாசம். இத்திரைப்படம் வருகிற ஜனவரி 10ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது.

இதனையொட்டி இப்படத்தின் முன்னோட்ட காட்சிகள் தமிழ் சினிமா பிரபலங்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் காட்டப்பட்டு வருகிறது. சென்சார் குழு முதல் சினிமா பிரபலங்கள் வரை விஸ்வாசம் பார்த்த அனைவரிடம் இருந்தும் நேர்மறை விமர்சனங்கள் குவிந்து வருகிறது.

இந்த நேர்மறை விமர்சனங்கள் ஒருபுறம் இருக்க, தன்னை பெருமை பட வைத்த ஒரு விமர்சனமாக நடிகர் அஜித்தின் விமர்சனத்தை குறிப்பிட்டு இருக்கிறார் இயக்குனர் சிவா.


அதன் படி விஸ்வாசம் திரைப்படத்தை பார்த்த அஜித், "இந்த திரைப்படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒன்று. அந்த வகையிலே என் ரசிகர்களுக்கும் இப்படம் அமையும். நமது நான்கு படங்களிலும் இதுதான் மிகச்சிறந்த ஒன்று" என்பதே தல அஜித் கூறிய விமர்சனம் என்பதும் தெரியவந்துள்ளது.  

தொடர்புடைய செய்தி 

விஸ்வாசம் திரைப்படத்திற்காக "12" வருடத்திற்கு பின் தல அஜித் செய்துள்ள காரியம்