Breaking News

'இப்போ 3 வேலை சாப்பிடுறேனா காரணம் "அஜித்"... நெகிழும் வைரல் தாத்தா


நடிகர் அஜித் செய்த உதவிகள் குறித்து, அவ்வப்போது செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் அஜித் தனக்கு செய்த உதவி குறித்து பேசி இருக்கிறார், சமூக வலைதள பிரபலமான மூத்த அஜித் ரசிகர் ஒருவர்.

சமீபத்தில் வெளியான நடிகர் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படத்தை  பார்த்து விட்டு வெளியே வந்த இவர், பிரபல ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இது குறித்து பேசி இருந்தார்.


அதில், "விஸ்வாசம் திரைப்படம் மிகப்பிரமாதமாக இருக்கிறது. அஜித் மாஸாக நடித்து இருக்கிறார். அவர் எப்பொழுதுமே மாஸ் தான்.

இன்று நான், வொயிட் அண்ட் வொயிட், மூன்று வேலை சாப்பாடு என இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் அவர் தான். அவர் வாங்கி கொடுத்த மீன்பாடி வண்டியினால் தான் என் வாழ்க்கையே ஓடுகிறது" என தனது வழக்கமான நகைச்சுவை கலந்த ஆங்கில பாணியில் பேசி இருந்தார்.

இவர் மட்டுமல்லாது, திருநங்கைகள் சிலரும்; 'ஆரம்பம்' பட படப்பிடிப்பின் போது தங்களுக்கு அஜித் பணஉதவி செய்தது குறித்து பேசி வாழ்த்தி இருந்தனர்.