Saturday, 19 January 2019

அஜித்தின் வீட்டை காணோமே...? தேடி அலையும் திரையுலகினர்


நடிகர் அஜித் தனது புதிய வீட்டின் முகவரியை கூட சொல்லாமல், திரையுலகினரை அலையவிட்டு வருகிறாராம். தமிழ் சினிமாவின் டாப் நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் அஜித், நமக்கு எதுக்கு வம்பு என்பது போல, திரையுலகம் சார்ந்த பொது நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற மறுத்து வருகிறார்.

மேலும், அவரை அவ்வளவு எளிதாக சந்தித்து விடமுடியாது  என்ற ஒரு நிலையும் இருந்து வந்தது. நடிகர் சங்கம் சார்ந்த விழாக்களில் கூட இவர் பங்கு கொள்வதில்லை என்பதால், நடிகர் சங்க துணைத் தலைவர் விஷாலும் இவர் மீது அதிருப்தி தெரிவித்து இருந்தார்.


இந்நிலையில், திரையுலகினருக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் தனது புதிய மனையின் முகவரியை நட்புவட்டாரங்கள் தவிர, பிறருக்கு தெரியாத வகையில் மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறாராம்.

இதனால் அவரை நேரில் சென்று சந்திக்க நினைக்கும், ரசிகர்கள் உள்ளிட்ட பிற திரையுலகினர் செய்வதறியாது தவித்து வருகின்றனர். நடிகர் அஜித் முன்னதாக திருவான்மியூரில் உள்ள வாழ்மீகி நகரில் வசித்து வந்த நிலையில், சிலமாதங்களுக்கு முன்னதாக நவீன வசதிகளுடன்புதிய வீடுகட்டி குடியேறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.


Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();