Breaking News

ரசிகர் தந்தையை கொளுத்திய விவகாரம்..! அதிர்ந்து போன தல அஜித்


நடிகர் அஜித்திற்கு இருக்கும் தீவிர ரசிகர் பட்டாளம் குறித்து ஒட்டுமொத்த திரையுலகமே அறியும். இவர்களில் பெரும்பாலானோர், ரசிகர்களாக நடிகர் அஜித்திற்கு பெருமை தேடி தந்த சம்பவங்கள் ஏராளம்.

ஆனால் ஒரு சில ஆர்வக்கோளாறு ரசிகர்கள், பிற ரசிகர்கள் செய்த நல்ல காரியங்களை மக்கள் மறந்து போகும் அளவிற்கு விபரீத காரியங்களில் ஈடுபட்டு விடுகின்றனர்.


அப்படி கடந்த 10ம் தேதி, வேலூர் காட்பாடியை சேர்ந்த அஜித் குமார், எனும் அஜித் ரசிகர், விஸ்வாசம் பார்க்க பணம் தராத தந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்ய முயன்று கைது செய்யப்பட்டார்.

ஒட்டு மொத்த தமிழகத்தின் அஜித் ரசிகர்கள் மீதான நன்மதிப்பை குறைத்த இந்த சம்பவம், அஜித்தின் காதிற்கு சென்றுள்ளது. அதனை கேட்டு, 'இப்படியும் முட்டாள்தனம் செய்யும் ரசிகர்கள் இருக்கிறார்களா' என அதிர்ந்து போய் இருக்கிறாராம் தல அஜித்.  


மேலும் வேலூர் கத்திக் குத்து விவகாரம், திருக்கோயிலூர் கட் அவுட் விபத்து ஆகியவை குறித்தும் கேட்டு மனம் வருந்திய அஜித், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரகசியமாக உதவ முடிவெடுத்து இருப்பதாகவும் கிசு கிசுக்கிறது அவரது நெருங்கிய வட்டாரங்கள்.