Breaking News

எல்லை மீறும் ரசிகர்கள்...! அஜித் எடுத்த அதிரடி முடிவு...!


'அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு' எனும் பிரபல பழமொழி போல, அளவுக்கு மீறிய ரசிகர்களின் அன்பினால், விஸ்வாசம் பட ரிலீஸின் போது பல அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றது.

தந்தையை கொளுத்திய மகன், அடிதடியில் இருவருக்கு கத்தி குத்து, பேனர் சரிந்ததில் ஒருவர் பலி என அஜித்தின் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் விதத்திலேயே தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர் ஒரு சில ரசிகர்கள்.


போதாதைக்கு, நாங்கள் எதிரிகளாய் பார்த்த கமல் ரசிகர்களே இவர்களுக்கு மேல் என ரஜினியின் ரசிகர்களும் அஜித் ரசிகர்கள் பற்றி விமர்சிக்க, விபரம் நடிகர் அஜித்தின் காதிற்கு சென்றிருக்கிறது.

எப்பொழுதும் இது போன்ற விஷயங்களை கண்டும் காணாமல் இருந்து விடும் தல அஜித், இந்த முறை ரசிகர்களின் சேட்டை எல்லை மீறியதை  அடுத்து, அவற்றை கண்டிக்கும் விதத்தில் அறிக்கை வெளியிட இருப்பதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.  


ஏற்கனவே இது போன்ற விரும்பத்தகாத ரசிகர்களின் நடவடிக்கைகளினால் தான் அஜித் தனது ரசிகர் மன்றங்களை கலைத்தார். அதன் பிறகு முறையான தலைமை இன்றி சீறி பாய்ந்து வந்த இந்த ரசிகர் கூட்டம், அஜித்தின் அறிக்கைக்கு பின்னாலாவது சீர் படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.